158. அருள்மிகு சாரபரமேஸ்வரர் கோயில்
இறைவன் சாரபரமேஸ்வரர், செந்நெறியப்பர்
இறைவி ஞானாம்பிகை
தீர்த்தம் மார்க்கண்டேய தீர்த்தம்
தல விருட்சம் மாவிலங்கை
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் திருச்சேறை, தமிழ்நாடு
வழிகாட்டி கும்பகோணத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம், திருவாரூர் ஆகிய ஊர்களிலிருந்து நேரடி பேருந்து வசதி உண்டு. குடவாசலிலிருந்து 5 கி.மீ. தொலைவு.
தலச்சிறப்பு

Thirucherai Gopuramதன்னை நாடி வந்து சேரும் மக்களுக்கு செம்மையான நெறியை வழங்குவதால் இத்தலம் 'சேறை' என்றும் இக்கோயில் மூலவர் 'செந்நெறியப்பர்' என்றும் வழங்கப்படுகிறது.

மூலவர் 'சாரபரமேஸ்வரர்' உயர்ந்த பாணத்துடன் லிங்க மூர்த்தியாகக் காட்சி அளிக்கின்றார். இத்தலத்தில் சாரநாத பெருமாள் கோயில் இருப்பதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறார். இவருக்கு 'செந்நெறியப்பர்' என்ற திருநாமமும் உண்டு. அம்பாள் 'ஞானாம்பிகை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.

Thirucherai Moolavarகோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, ரிஷபாருடர், பிரம்மா, துர்க்கை, இரண்டு சண்டேஸ்வரர்கள் தரிசனம் தருகின்றனர். விநாயகர், காசி விஸ்வநாதர், பாலசுப்ரமணியர், மகாலட்சுமி, வாயுலிங்கேஸ்வரர், ஜேஸ்டாதேவி தொடர்ந்து சிவகாமியம்மை உடனுறை நடராஜப் பெருமான், நவக்கிரகங்கள், சனிபகவான், சூரியன், பைரவர் காட்சி தருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 13, 14 மற்றும் 15ம் தேதிகளில் சூரியனது கதிர்கள் மூலவர் மீது படும் சூரிய பூஜை நடைபெறுகிறது.

Tirucherai Rinavimosanarபிரகாரத்தில் ரிண விமோசனர் சன்னதி உள்ளது. கடன் பிரச்சனை உள்ளவர்கள் இவரை வந்து வழிபடுகின்றனர்.

மார்க்கண்டேயர், தௌமிய முனிவர், காவிரி அம்மன் ஆகியோர் வழிபட்ட தலம்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களும் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com